Monday, August 3, 2009

தமிழ் ஜோக்ஸ்

இட்லிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்யாசம்?

பொங்கலுக்கு லீவ் கிடைக்கும் ஆனால் இட்லிக்கு லீவ் கிடைக்காதே ....

**************************************************************
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...

*************************************************************
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
*************************************************************
கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!
***********************************************************
ஒருவன்......மொழி தெரியாத ஊருக்கு பிழைக்கப் போனியே எப்படி சமாளிச்சே?

மற்றவன்... ஊமையா நடிச்சுத்தான்.
***********************************************************
''ராத்திரி பன்னிரண்டு மணிக்கு உன் மாமியாரை சுடு காட்டுல விட்டுட்டு வந்துட்டியாமே,

''ஏன்?''

''ஜலதோஷம்னு அவங்க தான் 'ஆவி' பிடிக்கணும்னாங்க''
***********************************************************
என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,


சினிமா Colourல தான் ஓடும்.

*********************************************
எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால் இருந்தாலும்,

ஒரு காலுக்கு கூட

ஷூவோ, செருப்போ மாட்ட முடியாது.
************************************************** *
டீ கப்புக்குள்ள டீ இருக்கும்.

ஆனா

வேர்ல்ட் கப்புக்குள்ள வேர்ல்ட் இருக்காது.
***********************************************
அம்மா அடிச்சா வலிக்கும், போலிஸ் அடிச்சா வலிக்கும், ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?


*******************************

பஸ்ல, கண்டக்டர் தூங்கினா யாரும் டிக்கெட் எடுக்க மாட்டாங்க, ஆனா டிரைவர் தூங்கினா எல்லோரும் டிக்கெட் எடுத்துடுவாங்க

********************************

கம்ப்யூட்டர் டீச்சர கணக்கு பண்ணலாம், ஆனா கணக்கு டீச்சர .கம்ப்யூட்டர் பண்ண முடியுமா?
***********************************

என்னதான் அஹிம்சாவாதியா இருந்தலும், சப்பாதிய சுட்டு தான் சாப்பிடனும்.

***********************************

நீ எவ்ளோ பெரிய வீரனா இருந்தலும், குளிர் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

*****************************

காசு இருந்தா கால் டாக்ஸி, காசு இல்லைன்னா கால்தான் டாக்ஸி.

*****************************
கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவங்களாச்சே!
நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?

மனைவி: அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிரி
இருக்காங்களே, அதான்!

———————————————————————————–

ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி
ஒரு குறிப்பு வந்தது :

“டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய
பதினேழாவது ஆபரேஷன் டேபிள் இது. தயவுசெய்து
ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்.”

—————————————————————————————

குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு டாக்டரைக் கேளுங்க.”

“அவரை எதுக்கு கேட்கணும்?”

“டாக்டரை கேட்காம இந்தக் குழந்தைக்கு எதுவும் தரக்
கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க.”

———————————————————————————

No comments:

Post a Comment