ஐம்பத்து நாலு வயதான அந்த அக்கவுண்டன்ட் மனைவியின் டார்ச்சர் தாங்காது ஒரு நாள் காணாமல் போய் விட்டார். மனைவியை வெறுப்பேற்ற ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார்.
“நாளை காலை நானும் என் பதினெட்டு வயது செகரட்டரியும் கொடைக்கானலில் ஹோட்டலில் ஜாலியாக இருப்போம்”
அடுத்த நாள் காலை ஹோட்டல் மேனேஜர் ஒரு பேக்ஸ் ஐ நீட்டினார். அது அவர் மனைவியிடமிருந்து வந்திருந்தது.
“என்னையும் உங்கள் பதினெட்டு வயது குமாஸ்தாவையும் தனியாக விட்டுச் சென்றதற்கு நன்றி. உங்கள் அக்கவுண்டன்ட் புத்திக்கு உறைக்காத விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஐம்பத்திநாலில் பதினெட்டு மூன்று தரம் போகும். ஆனால் பதினெட்டில் ஐம்பத்திநாலு போகவே போகாது”
_________________________________________________________________________________
கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
“பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்.”
“நீங்களும் ஆம்பிளையா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்”
_________________________________________________________________________________
அந்தத் தம்பதிக்கு பல வருஷங்களாக குழந்தைகள் இல்லை. மனைவி ஒரு லேடி டாக்டரையும் கணவன் ஒரு டாக்டரையும் பார்க்கப் போனார்கள்.
வீடு திரும்பிய மனைவி உற்சாகமாக இருந்தாள்.
“என்னங்க ஒரு குட் நியூஸ்.”
“என்ன அது?”
“நான் மாசமா இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க. நீங்க போன விஷயம் என்ன ஆச்சு?”
“பேட் நியூஸ்”
“அதான் என்கிட்டே குழந்தை பிறக்கப் போகுதுன்னே சொல்லிட்டாங்களே..இன்னும் என்ன பேட் நியூஸ்?”
“ஒரு பெண்ணை தாயாக்கற தகுதி எனக்கில்லைன்னு கன்பார்மா சொன்னாரு”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment