பொம்மையை பங்கு போட
புதிதாய் வரும்
தம்பி ”பாப்பா”
மூங்கில் பிரம்போடு
எப்பொழுதும்
உலாவரும் கணக்கு
”வாத்தியார்”
சைட் அடிக்கும் பெண்ணுக்கு
பாடிகாட் மூனீஸ்வர் மீசையோடு
அவ கூடவரும் ”அப்பா”
பீர் அடிச்சு வீட்டுக்கு
வரும் பொழுது
வீட்டுக்கு அருகில் வந்ததும்
வரும் ”வாமிட்”
எண்ணெயில் போட்டு எடுத்த கத்திரிக்காய்
மாதிரி வேர்த்து வழிய போகும் இண்டர்வியுக்கு
பிரிஜில் இருந்து எடுத்த தக்காளி மாதிரி
ப்ரஸா வரும் மாடன் ”பொண்ணு”
புது மனைவிக்கு முத்தம் கொடுக்க
ஆசையோடு நெருக்கும் பொழுது
ஓடி வந்து ரூமில் ஒளியும் ”குட்டீஸ்”
மல்லிகை பூ அல்வாவோடு
வீட்டுக்கு வரும் பொழுது
மூட்டை முடிச்சோடு
வீட்டில் டேரா போட
வந்திருக்கும் ”விருந்தாளிகள்”
மனைவி பிறந்த நாளுக்கு
புடவை எடுத்து கொடுக்க
கடைக்கு போகும் பொழுது
காஸ்ட்லி புடவையை மட்டும்
எடுத்து போடும் ”சேல்ஸ் மேன்”
முதல் மூன்று மாசம்
கடைசி மூன்று மாசம்
பிறகு இரண்டு மாசம்
என்று எல்லாம் முடிஞ்சு ஆசையோடு
மனைவி அருகில் போகும் பொழுது
பாலுக்கு அழும் கை ”குழந்தை”
தியேட்டரில் தனியாய் உட்காந்திருக்கும்
நேரம் “பாஸ் கொஞ்சம் கொஞ்சம் பின்னாடி அங்க உட்கார
முடியுமா நாங்க பிரண்ட்ஸா வந்திருக்கோம்?”
என்று நாலஞ்சு பிகரோட வந்து கேட்கும் ”அவன்”
பலான படம் பார்க்க போய்
இருக்கும் பொழுது
பிட்டு போடும் நேரம்
ரெய்ட் வரும் ”போலீஸ்”
கூட்டத்தில் முண்டி அடிச்சு கைய வுட்டு
ரெண்டு டிக்கெட் என்று கேட்கும் பொழுது
ஹவுஸ் புல் என்று போர்ட் மாட்டும்
”கவுண்டர் ஆள்”
சைட் அடிக்கும் பிகர் ஏறிய பஸ்ஸில்
ஏறி ரூட் விடும் பொழுது சில்லரை
இல்லை இறங்குன்னு
இறக்கிவிடும் ”கண்டெக்டர்”
லோன் போட்டு புதுசா வாங்கிய
பைக்கை ஓட்டி பழக
கேட்கும் ”மச்சினன்”
நடுராத்திரி போன்
போட்டு தூங்கிட்டியா
மாப்பிள்ளைன்னு மப்பில் அனத்தும் ”நண்பன்”
பக்கத்து தெரு ஆயா வூட்டு
அட்ரஸையும்
சூப்பர் பிகர் பீட்டரா
கேட்கும் பொழுது ”இங்கிலீஸ்”
பிகரை பின்னாடி இருந்து
பார்த்துவிட்டு சைக்கிளில்
துரத்தி கிட்டக்க போகும்
பொழுது சடார் என்று கழண்டு
போகும் சைக்கிள் ”செயின்”
புதுசா குடிவந்த பெண்ணை
சைட் அடிச்சுக்கிட்டு இருக்கும் பொழுது
அதோட பிறந்தநாளுக்கு ‘அண்ணனுக்கு”
சாக்லெட் கொடும்மா
என்று சொல்லும் வீட்டு ”பெருசு”
கையில் காசு இல்லாமல்
நண்பர்களோடு
சாப்பிட போகும் பொழுது
கரெக்டா பில்லை நம்மிடம்
கொடுக்கும் ”சர்வர்”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment